அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது.., GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், நல்லதொரு குழுவின் உழைப்பில், மிக சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. இப்பட டீம் அனைவருக்கும் என் நன்றிகள். கதை கேட்டபோதே மிகவும் பிடித்தது. மாணவர்கள் மத்தியில் பட ஃபர்ஸ்ட் ...