கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனம் செய்த சீமானுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் "எல்லா தேர்தலிலும் அடிவாங்குபவருக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த மாதம் அக்டோபர் மாதம் ௨௭–ஆம் தேதி நடைபெற்றது. அதில் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கொந்தளித்தார். கடுமையாக விமர்சனமும் செய்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "தம்பி, நான் குட்டிக் கதை சொல்ல வந்தவனில்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பி.எச்டி. வாங்கியுள்ளோம். உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை... அழுகின கூமுட்டை... ஒன்று ரோட்டில இந்த பக்கம் நில்லு, இல்ல அந்தப்பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில் அடி...