Posts

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

Image
நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனம் செய்த சீமானுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் "எல்லா தேர்தலிலும் அடிவாங்குபவருக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த மாதம் அக்டோபர் மாதம் ௨௭–ஆம் தேதி நடைபெற்றது. அதில் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்   கொந்தளித்தார். கடுமையாக விமர்சனமும் செய்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "தம்பி, நான் குட்டிக் கதை சொல்ல வந்தவனில்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பி.எச்டி. வாங்கியுள்ளோம். உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை... அழுகின கூமுட்டை... ஒன்று ரோட்டில இந்த பக்கம் நில்லு, இல்ல அந்தப்பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில் அடி...

மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *மாதவன் - மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி*

Image
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்டிருக்கிறது.  அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது. ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட...

கோவையில் தவெக' வினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

Image
  தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். அதனை அடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். பின் அந்த கேள்விக...

பிரியா பவானி சங்கர் நடிப்பில் ”ஜீப்ரா”!

Image
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிக...

மகன் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!

Image
  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடனான திருமண விவாகரத்துக்கு பின்னர்  கடந்த 2023ம் ஆண்டு  தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த  ஜூன் மாதம் அழகான  ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக 'இலை' என பெயர் வைத்து, புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இருந்தாலும் குழந்தையின் முகத்தை காட்டவில்லை. மகனின் முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.இந்நிலையில்,தன் செல்ல மகன் இலையுடன் முதல் முறையாக ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஓணம் பண்டிகை : விஜய் வாழ்த்து!

Image
சென்னை, செப். 15- கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார்.    

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

Image
சென்னை: மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது   ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின...