மகன் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடனான திருமண விவாகரத்துக்கு பின்னர் கடந்த 2023ம் ஆண்டு தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக 'இலை' என பெயர் வைத்து, புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இருந்தாலும் குழந்தையின் முகத்தை காட்டவில்லை. மகனின் முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.இந்நிலையில்,தன் செல்ல மகன் இலையுடன் முதல் முறையாக ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Comments
Post a Comment