நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!
சென்னை, செப்.8-
சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
. இதில் பங்கேற்க சைக்கிளில் நடிகர்
விஷால் வந்தார். கூட்டத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை
குறித்து ஆலோசனை நடந்தது .
சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும்
மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத்
தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம்
நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நவ.1-ஆ ம்
தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது என்ற தயாரிப்பாளர் சங்க
முடிவுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர்
சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சங்கத்தின்
68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் இன்றுகாலை தொடங்கியது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர்
கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன்,
செயற்குழு உறுப்பினர் லதாசேதுபதி,சோனியா,பசுபதி ,ராஜேஷ்
,கோவை சரளா,காளிமுத்து ,ஹேமச்சந்திரன்,
சரவணன்,அஜய் ரத்தினம்,ரத்னாப்பா ,வாசுதேவன்,ஸ்ரீமன்
,நியமன செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல்
ஆனந்த்,லலிதா குமாரி, முத்துகிருஷ்ணன், கலியுல்லாஹ்,அனந்த
நாராயணன், ஆனந்த் காளிமுத்து ,அடைக்கல ராஜா, முத்துகிருஷ்ணன், பிஎல் காந்தி,அறங்காவலர்
குழு உறுப்பினர் சர்ச்சு என்கின்ற சரஸ்வதி
பங்கேற்றனர். மேலும் மன்சூர் அலிகான் ,லொள்ளு சபா மாறன்
,சார்லி ,முரட்டுக்காளை,பெசன்ட் நகர் ரவி ,சுவாமிநாதன்,ரோகினி ,சுரேஷ் சக்கரவர்த்தி
,கிங்ஸ்லி ,சுனில் ரெடி,ரித்விகா ,பவன்,விச்சு,ஜார்ஜ் மரியம்,
முல்லை கோதண்டம் ,கிங் காங்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் , சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த
தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி
நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கேரளாவின்
ஹேமா கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில்
பங்கேற்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில்
வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment