Posts

Showing posts from September, 2024

கோவையில் தவெக' வினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

Image
  தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். அதனை அடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். பின் அந்த கேள்விக...

பிரியா பவானி சங்கர் நடிப்பில் ”ஜீப்ரா”!

Image
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிக...

மகன் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!

Image
  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடனான திருமண விவாகரத்துக்கு பின்னர்  கடந்த 2023ம் ஆண்டு  தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த  ஜூன் மாதம் அழகான  ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக 'இலை' என பெயர் வைத்து, புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இருந்தாலும் குழந்தையின் முகத்தை காட்டவில்லை. மகனின் முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.இந்நிலையில்,தன் செல்ல மகன் இலையுடன் முதல் முறையாக ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஓணம் பண்டிகை : விஜய் வாழ்த்து!

Image
சென்னை, செப். 15- கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார்.    

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

Image
சென்னை: மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது   ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின...

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

Image
சென்னை, செப்.8- சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் பங்கேற்க சைக்கிளில் நடிகர்  விஷால் வந்தார். கூட்டத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ஆலோசனை நடந்தது . சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நவ.1-ஆ ம் தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில்  இன்றுகாலை தொடங்கியது.  நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத...

தீபாவளி ரேஸில் கவினின் ‘பிளடி பெக்கர்’

Image
கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்'. அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக். 31-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்' படமும் இதே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. வெங்கி அட்லூரிஇயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்' படமும் அக். 31-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்த ரேஸில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளடி பெக்கர்' படமும் இணைந்துள்ளது. இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.  

சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 .

Image
வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில்  கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024  நடைபெற்றது  இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த்,  டாக்டர் சந்தீப் ஆனந்த்   விழாவை துவங்கி வைத்தார்கள். 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்  மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்  இயக்குனர் தரணி ராஜேந்திரன், கலை இயக்குனர் மூர்த்தி, எடிட்டர் செல்வா, நடிகர் அன்புடன்அர்ஜ...