நெல்லையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லையில் இன்று நடிகர் விஜய் வழங்கினார்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் நடிகர் விஜய் இன்று நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வீடு இழந்தவர்களுக்கும் அவர் நிதி உதவியும் வழங்கினார்.

இதற்காக அவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு  வருகை தந்து ,சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தார். இதற்காக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ரசிகர் மன்றத்தினர் தேர்வு செய்து மாதா மாளிகைக்குள் அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் தொகுப்பையும், வேட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும்,  விஜய் வழங்கினார்.  சுமார் 1,500 பேருக்கு சைவ மதிய உணவும் இங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தின் போது மின்வாரிய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.  நடிகர் விஜய் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள், ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

நிவாரணம் பெற கூடிய டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டுமே ஹாலில் அனுமதிக்கப்பட்டனர். நடிகர் விஜயை காண்பதற்காக அவரது ரசிகர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

Comments

Popular posts from this blog

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு