எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர் விஜயகாந்த! நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேட்டி!!

 எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர் விஜயகாந்த என நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்‌.எஸ் பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:

எல்லோர் மீதும் அக்கறை கொண்ட ஒரு அருமையான ஒர் இதயம் கொண்டவர்.

விஜயகாந்த் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிய கவலைப்படும் குழந்தை போல குணம் உடையவர்.

ஒரு நாள் நான் வீட்டில் வாசலில் நுழையும் பொழுது என்னை அழைத்து காரில் ரவுண்டு போகலாம் என அழைத்தார்.

இறுதியாக அவரை சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சந்தித்தேன். அதன் பிறகு பேரிடர் கொரோனா காலத்தில் ஒரு முறை கூட அவரை சந்திக்கவில்லை. அதன் பிறகு அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாம் அனைவரும் அவரிடம் தெரிந்து கொள்வது யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் நிறைய சாப்பிட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் என்றும் இறைவனாக வாழ இறைவனிடம் சென்று விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதியாக போயிட்டு வாங்க அண்ணே என கனத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு