தீவுத்திடலில் நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு தொண்டர்கள் இறுதி மரியாதை!

சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜயாகாந்த் உடல் இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


 

Comments

Popular posts from this blog

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு