2023 ம் ஆண்டில் மக்களை கவர்ந்த நடிகர்கள் யார்?
சென்னை: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய ஆண்டாகவே மாறியது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. ரசிகர்கள் தீபாவளி பண்டிகையை போல பட்டாசு வெடிப்பது, டிஜே வைப்பது என அலப்பறையை கிளப்ப ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் தான் உண்டு என்கிற நிலைமை தான் கடந்த ஆண்டும் இருந்தது. அதில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த ஹீரோ யார் என்கிற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தமிழ் சினிமாவுக்கு கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 900 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் ஃபேவரைட் நடிகர் என பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் விஜய் முதலிடத்தையும் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே எத்தனை சதவீதம் வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம்.
விஜய் நம்பர் ஒன் - 26.40% ரஜினி நம்பர் இரண்டு - 24.13% அஜித் நம்பர் மூன்று - 21.12% கவின் நம்பர் நான்கு - 12.29%
Comments
Post a Comment