கே.ஜி.எப் நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி


 

கே.ஜி.எப் படப்  புகழ் கன்னட நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த பொது 3 பேர்  மின்சாரம் தாக்கி பலியானார்கள் .
நடிகர் யாஷ் கே.ஜி.எப் படம்மூலம் பெயர் பெற்றவர். கன்னட திரையுலகம் மட்டுமே அறிந்து வந்த யாஷை அகில திரையுலகமும் திரும்பிப் பார்த்தது.யஷ்வந்த் என்ற பெயரை யாஷ் என்று சுருக்கினார்.
தற்போது ராக்கிங் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
2000ம் ஆண்டு முதல் பல தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியதன் மூலம் யாஷ் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற மோகினா மனசு, யாஷுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. முன்னணி பாத்திரத்தில் நடித்த அவரது முதல் படம், ராக்கி பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் அதைத் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றியடைந்த காதல் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2012 இல் டிராமா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
கூக்லி (2013), ராஜா ஹுலி (2013), கஜகேசரி (2014), மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி (2014) ஆகியவற்றின் மூலம் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் யாஷ்.
இந்த நிலையில் அவரின் பிறந்த நாள் இன்று பிரமாண்டமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
இதையொட்டி அவரின் கட்  அவுட்கள், பேனர்களை  வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதற்கிடையே கர்நாடக மாநிலம் கடக்  மாவட்டத்தில்  அவரின் கட் அவுட் மற்றும் பேனர்களை ரசிகர்கள் கட்டினர். அப்போது  அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.


Comments

Popular posts from this blog

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு