அரசியலில் விஜய்... சிவராஜ்குமார் சொன்ன வார்த்தை என்ன‌ தெரியுமா?

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.  
தனுஷ் உடன்‌ கேப்டன்மில்லர் படத்தில் நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் விஜய் குறித்து பேசியதாவது
, "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்."

"அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது," என தெரிவித்தார்.
 

Comments

Popular posts from this blog

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சைக்கிளில் வந்த விஷால்!

கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!

மனைவி ஆர்த்தி உடனான திருமண உறவிலிருந்து விலகுகிறேன் நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு