Posts

Showing posts from December, 2023

சண்முகபாண்டியன் டாட்டூ ஒட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகும் போட்டோ

Image
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர் சகாப்தம் படம் மூலம் கதாநாயகனாக தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உலகுக்கு என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் டெரர் கண்களை தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். பின்னர் லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை தந்தை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். இந்நிலையில், விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் டாட்டூ ஒட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.  

எல்லா நடிகைகளுடனும் நடிக்க ஆசை திருப்பூரில் நடிகர் சதீஷ் பேட்டி

Image
சமந்தா, கீர்த்தி சுரேஷ் என எல்லா நடிகைகளுடனும் நடிக்க  எனக்கு ஆசை தான். இதற்கு அவர்கள் தான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடிகர் சதீஷ் கூறினார்.  நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த வெளியான காங்சரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து  மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் எனவும் அந்த வகையில் காங்சரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்...

நெல்லையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்!

Image
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லையில் இன்று நடிகர் விஜய் வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் நடிகர் விஜய் இன்று நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வீடு இழந்தவர்களுக்கும் அவர் நிதி உதவியும் வழங்கினார். இதற்காக அவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு   வருகை தந்து ,சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தார். இதற்காக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ரசிகர் மன்றத்தினர் தேர்வு செய்து மாதா மாளிகைக்குள் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் தொகுப்பையும், வேட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும்,   விஜய் வழங்கினார்.   சுமார் 1,500 பேருக்கு சைவ மதிய உணவும் இங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்...

விஜயகாந்த் இறந்த அதிர்ச்சியில் தொண்டர் சாவு!

Image
விஜயகாந்த் இறந்த அதிர்ச்சியில்   தொண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பெயர் மோகன். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறந்த செய்தியை தொலைக்காட்சியில்   பார்த்ததும் மோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் எதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் வாழ்கிறார்! நடிகர் பார்த்திபன் பேட்டி!!

Image
  எல்லோருடைய வாழ்க்கையிலும் எதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் வாழ்கிறார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தார் என்பதை வாழ்ந்து காட்டியவர். இங்க இருக்கக்கூடிய அனைவரின் உள்ளத்திற்குள் தான் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படுகிறார். உடலால் மட்டுமே மறைந்துள்ளார். அவர் செய்த நல்ல காரியங்களை எல்லாம் நினைவு கூற வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்.

எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர் விஜயகாந்த! நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேட்டி!!

Image
  எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர் விஜயகாந்த என நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்‌.எஸ் பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: எல்லோர் மீதும் அக்கறை கொண்ட ஒரு அருமையான ஒர் இதயம் கொண்டவர். விஜயகாந்த் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிய கவலைப்படும் குழந்தை போல குணம் உடையவர். ஒரு நாள் நான் வீட்டில் வாசலில் நுழையும் பொழுது என்னை அழைத்து காரில் ரவுண்டு போகலாம் என அழைத்தார். இறுதியாக அவரை சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சந்தித்தேன். அதன் பிறகு பேரிடர் கொரோனா காலத்தில் ஒரு முறை கூட அவரை சந்திக்கவில்லை. அதன் பிறகு அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாம் அனைவரும் அவரிடம் தெரிந்து கொள்வது யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் நிறைய சாப்பிட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் என்றும் இறைவனாக வாழ இறைவனிடம் சென்று விட்டார். இவ்வாறு அவர் கூறினார். இறுதியாக போயிட்டு வாங்க அண்ணே என கனத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம்!. விஜயகாந்த் குறித்து நடிகர் நெப்போலியன் உருக்கம்!!

Image
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து நடிகர் நெப்போலியன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது, "உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம். தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் விஜய்காந்த்   மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம் ..மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம். அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்.இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்.அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து   பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமாரும்    நானும் உடன் இருந்து கடினமா...

தீவுத்திடலில் நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு தொண்டர்கள் இறுதி மரியாதை!

Image
சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜயாகாந்த் உடல் இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.