Posts

Showing posts from January, 2024

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Image
Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது.. இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி. “ஹிட்லர்” மிகச் சிறந்த படைப்பாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. எடிட்டர் சங்கத்தம...

குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்! எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !!

 விஜய் நடித்த  “துள்ளாத மனமும் துள்ளும்” மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த  “பெண்ணின் மனதை தொட்டு”,   ஜெயம்ரவி, பாவனா நடித்த “தீபாவளி”, விமல் நடித்த “தேசிங்குராஜா”, விக்ரம் பிரபு நடித்த “வெள்ளகாரதுரை”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”, கவுதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த சத்தம்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தார். இத்தனை நடிகளின் ஹிட் லிஸ்டில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் இப்பொழுது, விமல் நடிக்க “தேசிங்குராஜா2” படத்தை இயக்கி வருகிறார். வருகிற 29ம் தேதி இவர், முதன் முதலாக இயக்கிய “துள்ளாத மனமும் துள்ளும்” வெளியாகி 25 வருடங்களாகிறது. இதை, #எழில்25 விழாவாகவும், #தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் விழாவாகவும் நடத்த இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்  P.ரவிசந்திரன் திட்ட மிட்டுள்ளார். வருகிற 27ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வடபழனி ...

கே.ஜி.எப் நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

Image
  கே.ஜி.எப் படப்  புகழ் கன்னட நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த பொது 3 பேர்  மின்சாரம் தாக்கி பலியானார்கள் . நடிகர் யாஷ் கே.ஜி.எப் படம்மூலம் பெயர் பெற்றவர். கன்னட திரையுலகம் மட்டுமே அறிந்து வந்த யாஷை அகில திரையுலகமும் திரும்பிப் பார்த்தது.யஷ்வந்த் என்ற பெயரை யாஷ் என்று சுருக்கினார். தற்போது ராக்கிங் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். 2000ம் ஆண்டு முதல் பல தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியதன் மூலம் யாஷ் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற மோகினா மனசு, யாஷுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. முன்னணி பாத்திரத்தில் நடித்த அவரது முதல் படம், ராக்கி பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் அதைத் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றியடைந்த காதல் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2012 இல் டிராமா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார். கூக்லி (2013), ராஜா ஹுல...

சூர்யாவை இயக்கும் ரவிக்குமார்!

Image
 அயலான் இயக்குனர் ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார். சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படமும் அவரது முதல் படத்தை போலவே சயின்ஸ் பிக்சன் கதையில்தான் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை உருவாக்கி அந்த கதையை சூர்யாவிடத்தில் கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர், தற்போது தனது கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிப்பதாக ரவிக்குமாருக்கு உறுதி அளித்திருக்கிறாராம். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படத்துக்கு பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்

Image
 தளபதி விஜய் மக்கள் இயக்கம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏனாதி சி.மதன் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது... ஊர் மற்றும் அதை சுற்றி உள்ள சிறு கிராமத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சினைகளை  எப்படி தீர்க்க நம்மளால் என்ன செய்ய முடியும் என்று அதை பற்றி மற்றும் கூட்டத்தில் சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டுள்ளது..‌.மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டரணி... மாணவரணி... இணையதள அணி மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி பிப்- 2 தேதி அறிவிப்பு!

Image
 டிக்கிலோனா படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் மீண்டும் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீப்பிள் மீடியா ஃபேக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபல் தேதி அறிவிப்பு !

Image
இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ரிபல். மேலும் இப்படத்தில் மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மூணார் பகுதியுள்ள கல்லூரி ஒன்றில் நடந்த உண்மை கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. இந்த நிலையில் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இளையராஜாவுடன் இணைந்து பின்னணி பாடும் விஜய்!

Image
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா, விஜய்யை இணைத்து ஒரு பாடலை பின்னணி பாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறதாம். தற்போது இந்த பாடலுக்கான கம்போசிங் பணிகளை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்ட நிலையில், பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளார். விரைவில் ரெக்கார்டிங் நடைபெறவுள்ளது.  

அரசியலில் விஜய்... சிவராஜ்குமார் சொன்ன வார்த்தை என்ன‌ தெரியுமா?

Image
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.   தனுஷ் உடன்‌ கேப்டன்மில்லர் படத்தில் நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் விஜய் குறித்து பேசியதாவது , "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்." "அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்...

2023 ம் ஆண்டில் மக்களை கவர்ந்த நடிகர்கள் யார்?

Image
சென்னை: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய ஆண்டாகவே மாறியது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. ரசிகர்கள் தீபாவளி பண்டிகையை போல பட்டாசு வெடிப்பது, டிஜே வைப்பது என அலப்பறையை கிளப்ப ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் தான் உண்டு என்கிற நிலைமை தான் கடந்த ஆண்டும் இருந்தது. அதில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த ஹீரோ யார் என்கிற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தமிழ் சினிமாவுக்கு கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 900 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் ஃபேவரைட் நடிகர் என பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் விஜய் முதலிடத்தையும் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே எத்தனை சதவீதம் வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். விஜய் நம்பர் ஒன் - 26.40% ரஜினி நம்பர் இரண்டு - 24.13% அஜித் நம்பர் மூன்று - 21.12% கவின்...

வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்வம் ஏன்? விஜய்சேதுபதி விளக்கம்!

Image
நடிகர் விஜய்சேதுபதி ஹீரோ - வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் முக்கியத்துவம் அறிந்து நடித்து வருகிறார். விஜய்சேதுபதி வில்லனாக பேட்ட, மாஸ்டர், விக்ரம் என‌ பல படங்களில் கலக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ் டைரக்டர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக அசத்தி இருப்பார். ஜவான் இந்தியா சினிமாவில் அதிக வசூல் செய்த படம்.  விஜய் சேதுபதி வில்லனாக ஜவான் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து உள்ளார். இவரது நடிப்பில் வெளிய இருக்கும் மெரி கிருஸ்துமஸ் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது, சமீப காலமாக வெளியான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் ரசித்து நடிப்பது ஏன்? நிஜ வாழ்க்கையில் யாரையும் கொல்ல முடியாது என்பதால், சினிமாவில் வில்லனாக நடிப்பதாக விஜய் சேதுபதி வேடிக்கையாக பதில். பேசியுள்ளார்.  

ரசிகரின் செல்போனை பறித்து வீடியோவை டெலிட் செய்த அஜித்!

Image
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு விடியோ வைரலாகியுள்ளது. அதில் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்து அவர் எடுத்த விடியோக்களை நீக்கியுள்ளார். ஆனால் அஜித்குமார் செய்ததையே இன்னொருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த விடியோ வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமூக எப்போதும் ரசிகர்களுக்கு புகைப்படங்கள் எடுக்க நேரம் ஒதுக்கும் அஜித்குமார் இப்படி செய்வதில் எதாவது நியாயம் இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மதிப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், நடிகர் அஜித் குமார் செய்தது தவறெனவும் மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்த...

நடிகர் விவேக் வழியில் தங்க துரை...!

Image
 டிவி நடிகர் தங்க துரை நடிகர் விவேக் வழியில் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சிக்கு வித்திடுகிறார்.தங்க துரை கூறியதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் ,மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை ரஜினிகாந்த்திடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன். அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

Image
தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத்தொடங்கிய 1938களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த இந்த டான்ஸ் டான் விருது விழா நடைபெற்றது.   வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனைப்பயணம் AVயாக இவ்விழாவில் ஒளி...

காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்

Image
சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ஒரு காதல். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற படமாக்கி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வ...